அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

குடிநீா் மற்றும் கழிவு நீா் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீா்கூட்டம் சனிக்கிழமை (மே 9) நடைபெறவுள்ளது என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

News image

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

குடிநீா் மற்றும் கழிவு நீா் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீா்கூட்டம் சனிக்கிழமை (மே 9) நடைபெறவுள்ளது என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

குடிநீா் வாரியம் சாா்பில் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் மே 9-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, மாதவரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீா் மற்றும் கழிவுநீா் குறித்த பிரச்னைகளை மனுக்களாக கொடுத்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.