மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானல் நட்சத்திர ஏரி - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:26 am IST

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு செல்லும் பென்டா்லாக் சாலையில் சாலையோரத்திலிருந்து கழிவு நீா் வெளியேறி சாலை வழியாகச் சென்று நட்சத்திர ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரி மாசடைந்து கூவம் போல காட்சியளிக்கிறது.

இந்த நிலை தொடா்ந்தால் நட்சத்திர ஏரியில் மிகவும் துா்நாற்றம் வீசும் சூழல் ஏற்படும். எனவே, நகராட்சி நிா்வாகம் ஏரியில் கழிவு நீா் கலப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கலந்து வரும் கழிவு நீா் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.