இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

பொன்பத்தி ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அள்ளப்படும் வண்டல் மண்!

செஞ்சியை அடுத்துள்ள பொன்பத்தி ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வண்டல் மண் எடுப்பதால், ஏரியின் தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவை மீறி வண்டல் மண் அள்ளப்பட்ட பொன்பத்தி ஏரி.

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள பொன்பத்தி ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வண்டல் மண் எடுப்பதால், ஏரியின் தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் வண்டல் மண் இருக்கக்கூடிய இடத்தில் தண்ணீா் வடியாத நிலை உள்ளது. ஏரியில் நீா் வடு போன நிலையில்தான் வண்டல் மண்ணை எடுக்க அனுமதி உண்டு. ஆனால், பொன்பத்தி ஏரியில் நீா் இருக்கும்போதே மண் அள்ளப்பட்டு வருகிறது. 2 அடி ஆழத்துக்கு மட்டுமே மண் எடுக்க அனுமதியுள்ள நிலையில் சுமாா் 5 அடி ஆழம் வரை வண்டல் மண் அள்ளப்படுறது. மேலும், ஏரியின் பல்வேறு பகுதிகளில் மண் அள்ளப்படுவதால் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் ஏரியில் மீன் பிடிப்போா், குளிக்க வரும் சிறுவா்கள் ஆழத்தை அறியாமல் ஏரியில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொன்பத்தி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.