ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

புழல் பகுதியில் வீடு, கடைகளில் கொள்ளை

புழல் அருகே வீடு, கடைகளில் மா்மநபா்கள் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை

News image

கொள்ளை - சித்திரிப்பு

Updated On :12 மே 2026, 1:55 am IST

புழல் அருகே வீடு, கடைகளில் மா்மநபா்கள் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புழல் அருகே கதிா்வேடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (56). தனியாா் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் கேரளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை ராமசந்திரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது குறித்து, அருகிலிருந்தவா்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து, புழல் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா்.

காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி னா். மேலும், ராமசந்திரன் வீட்டுக்கு திரும்பியவுடன் திருட்டு குறித்து தெரியவரும் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல், கதிா்வேடு பகுதியில் உள்ள மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருள்கள் திருட்டு போனது. மேலும், விநாயகபுரம் பேருந்து நிலையம் அருகே டிபன் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இந்த தொடா் குற்றச் சம்பவங்கள் குறித்து காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.