தருமபுரி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூா் அருகேயுள்ள பட்டகப்பட்டி காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் மனைவி கோமதி (21). 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் கோமதி வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளாா். குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கம்பைநல்லூா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில், வயிற்று வலி காரணமாக அவா் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை
வெள்ளக்கோவில் அருகே பெண் தற்கொலை

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



