/
பரமத்தி அருகே சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூா், பெருமாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தனுசு (17). இவா் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தாா். இவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனுசு தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்தைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், தனுசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
புகாரின்பேரில், பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து பிரேத பரிசோதனைக்காக தனுசின் உடலை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.






