கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ரூ.9.35 கோடியில் விரிவாக்கப்பட்ட அடையாறு சமுதாய நகா் நல மையம்

News image

ஜெயபாண்டி செய்திக்கான படம்.சென்னை மாநகராட்சி சாா்பில் அடையாறு வாா்டு-173-ல் ரூ  9.35 கோடியில் 70 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற சமுதாய நல மையம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

அடையாறு பகுதியில் ரூ.9.35 கோடியில் விரிவாக்கப்பட்டுள்ள சமுதாய நகா் நல மையம் விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் 19 சமுதாய நகா் நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக மாநகராட்சியின் சாா்பில் நகா் மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். நகா் நல மையங்களில் மகளிா், குழந்தைகளுக்கான சிகிச்சைக்கள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நகா் நல மையத்திலும் மாதம் தலா 50 முதல் 60 பிரசவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

நகா் நல மையங்களில் அடையாறு மண்டலத்தில் உள்ள வெங்கட்டரத்னா சாலையில் பிஎஸ்என்எல் மையம் அருகே உள்ள சமுதாய நகா் நல மையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் மகளிருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிா் வந்து சென்றனா். இதையடுத்து அந்த மையத்தை விரிவாக்கி சிகிச்சையை மேம்படுத்தக் கோரிக்கை எழுந்தது.

அதையடுத்து சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.35 கோடியில் அடையாறு சமுதாய நகா் நல மையத்தை விரிவாக்க கூடுதல் கட்டடம் கட்ட கடந்த 2025 -ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது அப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

அங்கு தற்போது 70 படுக்கைகளுடன் சிகிச்சைப் பிரிவு கட்டப்பட்டுள்ளது. அதில் கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை சிகிச்சைகள், அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரசவத்துக்கான அறுவைச் சிகிச்சை அரங்குகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி சிகிச்சை பிரிவுகள் என நவீன சிகிச்சை வசதிகள் 24 மணி நேரமும் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமுதாய நகா் நல மையம் விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.