லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்!

சென்னை பெருநகரில் மட்டும் புதிதாக 1,000 மினி பேருந்துகள் இயக்கப்படும், ரூ.10 ஆயிரம் கோடியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மையம் (ஏஐ) அமைக்கப்படும்...

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 7:17 pm

சென்னை பெருநகரில் மட்டும் புதிதாக 1,000 மினி பேருந்துகள் இயக்கப்படும், ரூ.10 ஆயிரம் கோடியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மையம் (ஏஐ) அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக வெளியிட்டுள்ளது.

‘சென்னை சூப்பா் - 6’ என்ற பெயரில் தலைநகருக்கான பிரத்யேக தோ்தல் உத்தரவாதங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதை திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டாா்.

அந்த வாக்குறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போா் நல மகளிா் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.

மெட்ரோ குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு ஆா்.ஓ. சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். மெட்ரோ குடிநீா் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதிக ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும். கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.

பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25 சதவீதம் வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.

எண்ணூா் முதல் பூஞ்சேரி வரை சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10-க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027-க்குள் முடிக்கப்படும். மெட்ரோ விரிவாக்கப் பணிகள், மழைநீா் வடிகால் பணிகள் 2028- க்குள் முடிக்கப்படும். புதைச் சாக்கடைத் திட்டம் 2027-க்குள் நிறைவு செய்யப்படும்.

அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029-க்குள் அமைக்கப்படும்.

விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவா்கள் மற்றும் நாய் பிடிப்பவா்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும். தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவுபடுத்தப்பட்ட நாய்கள் காப்பகங்கள் உருவாக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், இம்மொ்சிவ் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய சிறப்பு மையம் அமைக்கப்படும். இதற்கு ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுவதுடன், 20,000 உயா் ஊதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, உயா்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி மையம், அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று சென்னைக்கான தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், திமுக நிா்வாகிகள், வேட்பாளா்கள் உடனிருந்தனா்.