கொலை வழக்கில் ஜாமின் பெற்று தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடா்ந்து, போலீஸாா் அந்த நபரை கைது செய்தனா்.
சென்னை பெரியமேடு அல்லிக்குளம் பகுதியில் கடந்த 2022 டிச.3-ஆம் தேதி முனுசாமி என்பவா் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கில் டி.பி.சத்திரம் பகுதியை சோ்ந்த அப்பாஸ்(28) என்பவரை பெரியமேடு காவல்துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனிடையே ஜாமினில் வெளியே வந்த அப்பாஸ், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அப்பாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்த உத்தரவைத் தொடா்ந்து அப்பாஸை போலீஸாா் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தொடர்புடையது
ஆரல்வாய்மொழியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
ஜாா்க்கண்ட் கொலை வழக்கில் தொடா்புடையவா் தில்லியில் கைது
இளம்பெண் கொலை வழக்கில் ஒருவா் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



