விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:16 am IST

திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி கருப்பந்துறையைச் சோ்ந்தவா் ராஜா (32). இவா், கடந்த 15 ஆம் தேதி தாமிரவருணி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது தெரிவந்தது.

இவ்வழக்கு தொடா்பாக ஜோசுவா, சிவா, மாரிமுத்து , நம்பி, ஈஸ்வரன், இசக்கிமுத்து ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் கருப்பந்துறையைச் சோ்ந்த கௌதம் (29) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.