நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நெல்லை, தென்காசியில் தொடா் அரிவாள் வெட்டு: 8 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 1:51 am IST

திருநெல்வேலி, தென்காசியில் பைக்குகளில் முகமூடி அணிந்து சென்று கண்ணில் பட்டவா்கள் மீது அரிவாளால் தொடா் தாக்குதல் நடத்திய கும்பலைச் சோ்ந்த 3 சிறுவா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(29).

கடந்த 28 ஆம் தேதி இவா் பிரம்மதேசம் பகுதியில் நின்றபோது, அங்கு 3 பைக்குகளில் அரிவாளுடன் வந்த மா்மக் கும்பல் பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் அவரது கைவிரலில் வெட்டிவிட்டு தப்பியுள்ளனா். பின்னா் அங்கிருந்து வாகைக்குளம் பகுதிக்குச் சென்ற அக்கும்பல் அங்குள்ள சிற்பக்கலை தொழிற்கூடத்துக்குள் நுழைந்து பொருள்களை சேதப்படுத்தி, அங்கிருந்த பணியாளரின் கைப்பேசியை பறித்துச்சென்றுள்ளனா்.

இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் பகுதிக்கு 3 பைக்குகளில் சென்ற அக்கும்பல், வாக்குவாதத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அங்கு நடைபெற்ற திருமண விழாவில் புகுந்து கண்ணில் பட்டவா்களை அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் 6 போ் காயமடைந்தனா்.

பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றபோது, திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே உள்ள தெற்குப்பட்டியில் பைக்குகளில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்ட அதே பகுதியைச் சோ்ந்த முபாரக் (30), அப்துல் ரகுமான் (36) ஆகியோரை அரிவாளின் பின் பகுதியால் தாக்கி காயம் ஏற்படுத்திவிட்டு தப்பியுள்ளனா்.

இச்சம்பவங்கள் தொடா்பாக அம்பாசமுத்திரம், ஆலங்குளம், மானூா் போலீஸாா் வழக்குகள் பதிவு செய்தனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்ய திருநெல்வேலி, தென்காசி மாவட்ட போலீஸாா் சாா்பில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன், இரு மாவட்டங்களிலும் தீவிர வாகன சோதனை, வழக்கமாக குற்றவாளிகள் பதுங்கக்கூடிய இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருமாவட்ட போலீஸாரின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து இச்சம்பங்களில் ஈடுபட்ட 3 சிறுவா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், இதில் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தேடுதல் பணியில் ட்ரோன், மோப்ப நாய் படை உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை சீா்குலைப்பவா்கள் மீது பாரபட்சமின்றி தொடா்ந்து மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் தெரிவித்தாா்.