சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

"ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்': சென்னையில் 75 ரௌடிகள் கைது

News image
Updated On :21 மே 2026, 4:36 am IST

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்த கொலைச் சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக காவல்துறை மேற்கொண்ட, "ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்' நடவடிக்கை மூலம் ஒரே இரவில் 75 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியில் கடந்த மே 17-இல் சீனிவாசன், பரத் ஆகிய கானா பாடல் கலைஞர்கள் ஏழு பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இரண்டு சிறுவர்கள் உள்பட ஐந்து பேரை மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முன்விரோதம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட காரணங்களால் இந்த இரட்டைக் கொலை நடைபெற்றது தெரியவந்தது.

இதுபோல, இரு மாதங்களுக்கு முன்பு பல்லாவரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரட்டை கொலைச் சம்பவங்கள், தலைநகரில் பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளன.

இதன் எதிரொலியாக, சென்னை மாநகர எல்லைக்குள் ரௌடிகள் மோதல்கள், போதைப் பொருள் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகர காவல்துறை "ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் ' நடவடிக்கையை சமீபத்தில் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் காவல்துறையினர் சென்னை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் ரவுடிகளை கைது செய்தனர்.

இதன்படி, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 20 பேர், தியாகராய நகரில் 18 பேர், மயிலாப்பூரில் 12 பேர், அடையாறில் 16 பேர், அண்ணா நகரில் 9 பேர் என மொத்தமாக 75 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்றும், போதைப் பொருள் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், "ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் ' நடவடிக்கை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.