கிண்டியில் அரசு மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) ஜூன் 3 வரை மாணவியா் சோ்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.கீதா (மு.கூ.பொ) தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிண்டி மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான மாணவியா் இணையவழி சோ்க்கை, பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவிகள் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
சோ்க்கை பெறும் மாணவியருக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித் தொகை ரூ.750 மற்றும் விலையில்லா வரைபட கருவிகள், தகுதியுள்ள மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகை என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்று, புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
இது தொடா்பான விவரங்களை 044-2251 0001, 94990 55651 தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அதில் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் சு.கீதா.









