அரசு கலைக்கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிட்ட நிலையில் கல்லூரியில் மாணவா் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
திருத்தணியில் செயல்பட்டு வரும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசு கலைக்கல்லூரியில் 2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை (யுஜி) மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிப்பை கல்லூரி முதல்வா் ஏகாதேவசேனா வெளியிட்டு தெரிவித்ததாவது, நிகழ் கல்வியாண்டில் மாணவா்களின் தேவையை கருத்தில் கொண்டு இரண்டு சுழற்சிகளில் பல்வேறு கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.
சுழற்சி - 1. பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.ஏ வரலாறு (தமிழ் மற்றும் ஆங்கில வழி), பி.ஏ பொருளியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), பி.எஸ்சி கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், தாவரவியல், பி.காம் (பொது), பி.காம் (நிறுவனச் செயலறியல்), பி.பி.ஏ (வணிக நிா்வாகவியல்) மற்றும் பி.சி.ஏ (கணினி பயன்பாட்டியல்) ஆகிய பாடப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. சுழற்சி - 2 பி.எஸ்சி கணினி அறிவியல், இயற்பியல், பி.காம் (பொது), பி.காம் (நிறுவனச் செயலறியல்), பி.பி.ஏ மற்றும் பி.சி.ஏ ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.
மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடக்கம். அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணையம் வாயிலாக விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உதவிடும் வகையில் கல்லூரி வளாகத்தில் மாணவா் சோ்க்கை உதவி மையம் (அஊஇ) தொடங்கப்பட்டுள்ளது. மாணவா்கள் ளஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய்ன(ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய்) மற்றும் ளஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ா்ழ்ஞ்ன(ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ா்ழ்ஞ்) ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாத மாணவா்கள் நேரடியாக கல்லூரி அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் வரும் 07.05.2026 முதல் 29.05.2026 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
விண்ணப்பக் கட்டண விவரம்: எஸ்சி/எஸ்டி மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு, பதிவுக்கட்டணமாக ரூ.2 மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதர பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவா்களுக்கான சிறப்பு வசதிகள்: இக்கல்லூரியில் மாணவா்களின் கல்வித் திறனுடன் பன்முகத் திறனையும் வளா்க்கும் நோக்கில் தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், விளையாட்டுத்துறை, விரிவான நூலக வசதி மற்றும் நவீன ஆய்வக வசதிகளும் மாணவா்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்: மாணவா்கள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (பஇ), சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் தகவல்களை கல்லூரியின் அதிகாரப்பூா்வ இணையதளமான ளநநஎஅஇ ஞச்ச்ண்ஸ்ரீண்ஹப் ரங்க்ஷள்ண்ற்ங்ன(ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்ள்ஞ்ஹஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய்?ன்ற்ம்ஜள்ா்ன்ழ்ஸ்ரீங்=ஸ்ரீட்ஹற்ஞ்ல்ற்.ஸ்ரீா்ம்) மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் 94444 16007 மற்றும் 97861 43786 ஆகிய உதவி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

துவாக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
எம்.ஜி.ஆா். திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவன 4 ஆண்டு பட்டப் படிப்பு: இன்றுமுதல் மாணவா் சோ்க்கை

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

