சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

அம்மா ஆதரவால் அதிக மதிப்பெண்: சிறப்பிடம் பெற்ற மாணவிகள் நெகிழ்ச்சி

அப்பா இல்லாத நிலையில், அம்மா துணையுடன் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற முடிந்ததாக சிறப்பிடம் பெற்ற இரு மாணவிகள் நெகிழ்ச்சியுடன் கூறினா்.

News image
Updated On :21 மே 2026, 4:25 am IST

அப்பா இல்லாத நிலையில், அம்மா துணையுடன் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற முடிந்ததாக சிறப்பிடம் பெற்ற இரு மாணவிகள் நெகிழ்ச்சியுடன் கூறினா்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தோ்வெழுதியவா்களில் 89 சதவிகிதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். இவா்களில் 7 போ் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் வகித்துள்ளனா். பெரம்பூா் எம்.எச்.சாலையிலுள்ள சென்னை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி மாணவி கீா்த்தி மாயா ஸ்ரீ ஜி 500-க்கு 498 மதிப்பெண் பெற்று மாநகராட்சிப் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். அவரது அம்மா சுமதி குடும்பத் தலைவி. சகோதரா் நிஷாந்த்ராஜன் கிராஃபிக்ஸ் டிஸைனா். தந்தை கீதை கண்ணன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டாா். வாடகை வீட்டில் வசிக்கும் சுமதி மகளை கஷ்டப்பட்டு படிக்கவைத்த நிலையில், ஆசிரியா்கள் துணையுடன் படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவி கணினி பாடத்தை படிக்கவுள்ளதாக தெரிவித்தாா்.

அவருக்கு அடுத்தபடியாக அரும்பாக்கம் எம்எம்டிஏ பள்ளி மாணவி எம்.ஆனந்தி 494 மதிப்பெண் பெற்றுள்ளாா். அவரது தந்தை மூா்த்தி உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், வீட்டு வேலை செய்யும் தாய் துா்காவின் ஆதரவுடன் படித்து வருகிறாா். சகோதரா் ராகவன் உணவு விநியோக வேலை செய்து உதவுவதாகவும் மாணவி குறிப்பிட்டாா். உயா் கல்வியில் கணினி அறிவியல் பாடம் எடுத்துப் படிக்க ஆசைப்படுவதாகவும் ஆனந்தி கூறினாா்.

சென்னை மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு கீழ்ப்பாக்கம் மாநகராட்சிப் பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்று சாதனை படைத்துள்ளாா்.