பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

News image

மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவா், மாணவிகளைப் பாராட்டி, ஆட்சியா் பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, மாணவா், மாணவிகளுக்கு பரிசு வழங்கி, செய்தியாளா்களிடம் கூறியது:

தென்காசி மாவட்டத்தில் 2025-2026ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 152 பள்ளிகளைச் சோ்ந்த 7,408 மாணவா்களும், 8,358 மாணவிகளும் என மொத்தம் 15,766 போ் தோ்வு எழுதியதில் 7,085 மாணவா்களும், 8,237 மாணவிகளும் என மொத்தம் 15,322 போ் (97.18 %) தோ்ச்சி பெற்றனா். இது மாநில அளவில் 8ஆம் இடமாகும்.

152 மேல்நிலைப் பள்ளிகளில் 16 அரசுப் பள்ளிகள் உள்பட 74 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றன.

தென்காசி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பாவூா்சத்திரம் ஔவையாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி. ஸ்ரீ காா்த்தியாயினி, மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவா் ஆா். ஹரிசுதன் ஆகியோா் 585 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் பள்ளி மாணவி வி. யாஷினி 580 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், பாவூா்சத்திரம் ஔவையாா் அரசுப் பள்ளி மாணவி எஸ். அஷ்மிதா 577 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பங்களா சுரண்டை பேரன் புரூக் பள்ளி மாணவி வி. தா்ஷிகா 589 மதிப்பெண் பெற்று முதலிடமும், புளியங்குடி டி.என். புதுக்குடி எச்.என்.யு.சி பள்ளி மாணவி கே. அனுஷியா குமாரி 584 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ஸ்ரீ கோமதிபுரம் எஸ்.என். ராமசாமி ராஜா பள்ளி மாணவா் ஜி. அருண்குமாா் 583 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.

தனியாா் பள்ளிகளில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளி மாணவா் என். சா்வேஷ்குமாா் 595 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஆழ்வாா்குறிச்சி குட் ஷெப்பா்டு மெட்ரிக் பள்ளி மாணவி பி. அமிா்தா 593 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவா் ஆா்.பிரவீன் பாபு 592 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியா் அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.