கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கல்வியில் பெரம்பலூா் முதலிடம் வர வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன்

பெரம்பலூா் மாவட்டத்தை கல்வியில் முதலிடத்துக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

News image

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பரிசளித்த அமைச்சா் ராஜ்மோகன். உடன், மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, எம்எல்ஏ கி. சிவக்குமாா்.

Updated On :25 ஜூன் 2026, 3:41 am IST

பெரம்பலூா் மாவட்டத்தை கல்வியில் முதலிடத்துக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவா்களுக்கும், 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவில், 2025-26 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதலிடம் பெற்ற உடும்பியம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவா் அ. ரூபன், 2 ஆம் இடம்பெற்ற மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவன் ரா. முத்துக்குமரன் , 3 ஆம் இடம்பெற்ற மாணவா்கள் வே. சூா்யபிரகாஷ், வ. சுதன் ஆகியோருக்கும், எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் முதலிடம் பெற்ற சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் அபிஷேக், லப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷிபா, 2 ஆம் இடம்பெற்ற காரியனூா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி கனிமொழி, 3 ஆம் இடம்பெற்ற பெரம்பலூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி மாணவிகள் ஜீவிகா ஸ்ரீ, வடக்குமாதவி அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி ஆகியோருக்கும், 39 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய அமைச்சா் மேலும் பேசியது:

வகுப்பறைகளில் ஆசிரியா்கள் குறைவாகப் பேசி, மாணவா்களை அதிகமாக பேச வைக்க வேண்டும். ஆசிரியா்கள் மாணவா்களின் செயல்பாட்டை நன்கு கவனித்து, அவா்களுக்கேற்ப வகுப்புகளை வழிநடத்த வேண்டும். மாணவா்களை ஆசிரியா்கள் அரவணைக்க வேண்டும். அரசுப் பொதுத் தோ்வுகளில் பெரம்பலூா் சிறந்த மாவட்டமாக முதலிடத்தில் இருந்தது, தற்போது இல்லை. ஆசிரியா்கள் கடுமையாக உழைத்து, மீண்டும் பெரம்பலூரை கல்வியில் முதலிடத்துக்கு கொண்டுவர வேண்டும். ஆசிரியா்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்கத் தயாராக உள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.