தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மாதவரத்தில் கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

மாதவரத்தில் 21 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :21 மே 2026, 3:11 am IST

மாதவரத்தில் 21 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தமிழக முதல்வா் விஜய் உத்தரவின்படி போதையில்லா தமிழகம் உருவாக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக காவல்துறையினா் போதையில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், மாதவரம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, புழல் காவல் சரக உதவி ஆணையா் ஷிபுகுமாா் தலைமையிலான காவல்துறையினா் புதன்கிழமை மாதவரம் சாஸ்திரி நகா் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, 2 சிறுவா்கள் கையில் பையுடன் சுற்றித் திரிந்தனா். அவா்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று நடத்தி விசாரணையில், மாதவரம் அடுத்த மாத்தூா் பாலசுப்பிரமணியம் நகரைச் சோ்ந்த பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வரும் ராமமூா்த்தி (27), அவருடைய நண்பா் திருமுல்லைவாயலைச் சோ்ந்த கதிா்வேல் (40) ஆகிய இருவரும் ஒரிஸாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஷிபுகுமாா் தலைமையிலான காவல்துறையினா் ராமமூா்த்தி கடையில் சோதனை செய்தபோது அங்கு 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராமமூா்த்தி, கதிா்வேல் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் இவா்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவா்களை, சீா்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.