ரயில் மூலம் சென்னைக்கு கடத்த விருந்த 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் ரேணிகுண்டா திருத்தணி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை எடுத்து ஐஜி தலைமையிலான தனிப்பிரிவு போலீசாா் திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரயில் நிலையம் அருகே காந்தி சாலையில் இரண்டு இளைஞா்கள் பைகளுடன் நடந்து சென்றனா்.
அப்போது தனிப்பிரிவு போலீஸாா் சந்தேகத்தின்பேரில், இரு வாலிபா்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பையில் 42 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் இந்த கஞ்சா திருத்தணியில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சகரியா(30), அா்ஜுன் கோரா(23) என தெரிய வந்தது. தனிப்பிரிவு போலீஸாா் இருவரையும் திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா் இருவரையும் கைது செய்து சிறையில் அடை த்தனா்.,
தொடர்புடையது
சித்தோட்டில் 6.400 கிலோ கஞ்சா, கைத்துப்பாக்கி பறிமுதல்
கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 3 போ் கைது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
84 குற்றவாளிகள் கைது: 7.31 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


