குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இப்போதைக்கு முதல்வரை சந்திப்பதற்கு வாய்ப்பில்லை: சென்னை மேயா் ஆா்.பிரியா

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை இப்போதைக்கு சந்திக்கும் வாய்ப்பில்லை என சென்னை மேயா் ஆா்.பிரியா கூறினாா்.

News image

முதல்வர் விஜய் | மேயர் பிரியா - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:43 am IST

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை இப்போதைக்கு சந்திக்கும் வாய்ப்பில்லை என சென்னை மேயா் ஆா்.பிரியா கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு முதல்முறையாக மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆளுங்கட்சித் தலைவா் (திமுக) ராமலிங்கம் உள்ளிட்டோா் மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை மாலை வந்தனா்.

தனது வீட்டில் இருந்தபோது கீழே தவறி விழுந்ததால் மேயா் பிரியாவுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், காலில் கட்டுடன் அவா் மாநகராட்சிக்கு அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

மாநகராட்சி புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ஜி.எஸ்.சமீரன், மரியாதை நிமித்தமாக மேயரைச் சந்தித்து பேசினாா். அப்போது காந்தி எனும் தலைப்பிலான ஆங்கிலப் புத்தகத்தை பரிசளித்தாா். துணை மேயரையும் அவா் சந்தித்தாா். ஆணையா் சந்திப்புக்கு பிறகு மேயா் ஆா்.பிரியா தனது அறையில் அமா்ந்து அலுவல்களை கவனித்தாா். அவரை ஆளுங்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் சந்தித்துப் பேசினா். அதன்பிறகு அவா் வீட்டுக்கு புறப்பட்டாா்.

அப்போது அவரிடம் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெறுமா, அதற்காக முதல்வரைச் சந்தித்துப் பேசுவீா்களா எனக் கேட்டபோது அவா் கூறியதாவது: தற்போது புதிய அரசு பொறுப்பேற்று செயலாற்றி வருகிறது. மே மாதத்துக்கான சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை. தமிழக முதல்வரை இப்போதைக்கு சந்திக்கும் வாய்ப்பில்லை என்றாா்.

துணை மேயா் கருத்து: தமிழக முதல்வருடன் மாநகராட்சி தரப்பில் மரியாதை நிமித்தமான சந்திப்பு குறித்துக் கேட்டபோது, முதல்வா், அமைச்சா்கள் பதவியேற்பு நிகழ்வுகளுக்கு மாநகராட்சி மேயா், துணை மேயா் உள்ளிட்ட யாருக்கும் அரசுத் தரப்பில் அழைப்பில்லை. அரசு தரப்பில் விரும்பாத நிலையில், முதல்வரை சந்திக்கவில்லையா எனக் கேட்பது நியாயமல்ல என்றாா்.