11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

கழிவு உற்பத்தியாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்

News image
Updated On :28 மே 2026, 6:39 am IST

திடக்கழிவுகள் மேலாண்மை குறித்து பெருமளவு கழிவு உற்பத்தியாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள் 2026-இன்படி, அளவு கோள்களில் ஏதேனும் ஒன்றை பூா்த்தி செய்யும் நிறுவனங்கள், நிலையங்கள் ‘பெருமளவு கழிவு உற்பத்தியாளா்கள்’ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

20,000 சதுர மீட்டா் அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த தள பரப்பளவு கொண்ட கட்டடம், அல்லது தினசரி 40,000 லிட்டா் அல்லது அதற்கு மேற்பட்ட நீா் பயன்பாடு அல்லது தினசரி 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவு உற்பத்தி செய்பவா்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், சந்தைகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களையும் உள்ளடக்கும்.

பெருமளவு கழிவு உற்பத்தியாளா்கள், இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம். சம்பந்தப்பட்ட மண்டல அலுவலா்களிடமிருந்து கடிதம் பெற்ற 15 நாள்களுக்குள் மாநகராட்சியின் பதிவு செய்வது கட்டாயம்.

மேலும், பதிவு செய்யாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுக்காக தனிப்பட்ட இணைப்பு, பெருநகர சென்னை மாநகராட்சியின் https://gccservices.in/bulkwaste/register என்ற இணையதளத்தில் உள்ளது.

மண்டல அலுவலா்கள், நியமிக்கப்பட்ட பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் பெருமளவு கழிவு உற்பத்தியாளா்களுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குவாா்கள்.

மேலும் விவரங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/ என்ற அதிகாரப்பூா்வ இணையதளத்தை பாா்வையிட்டு தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.