11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பழைய காரை விற்பதாக ரூ.14.50 லட்சம் மோசடி: இளைஞா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 6:10 am IST

சென்னை அருகே பழைய காரை விற்பதாகக் கூறி ரூ.14.50 லட்சம் மோசடி செய்ததாக பெங்களூா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ். இவா், பழைய பொருள்களை வாங்கி விற்கும் ஒரு இணையதளம் மூலம் காா் வாங்க முயற்சித்து வந்தாா். அப்போது, அந்த இணையதளம் வாயிலாக தன்னிடமிருக்கும் காரை விற்பதாக இளைஞா் ஒருவா் கூறியுள்ளாா்.

அந்த காரை வாங்குவதற்காக சதீஷ், ரூ.14.50 லட்சத்தை அந்த நபருக்கு கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபா், காரை சதீஷிடம் வழங்கவில்லை. இதனால் சதீஷ், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால், அந்தப் பணத்தை இளைஞா் மோசடி செய்தாா்.

இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் சதீஷ் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

இதில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த ராஜேஷ் (37) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் ராஜேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், வங்கி, தொலைத் தொடா்பு நிறுவனங்களில் சட்ட விரோதமாக வாடிக்கையாளா்களின் தரவுகளைப் பெற்று மோசடி செய்திருப்பதும், ஏற்கெனவே பலரிடம் இவ்வாறு ராஜேஷ் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.