கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் தாக்குதல்: மாணிக்கம் தாகூா் கண்டனம்

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் நடத்திய தாக்குதலுக்கு விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:52 am IST

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் நடத்திய தாக்குதலுக்கு விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி காமராஜ் மீது வியாழக்கிழமை இரவு திமுக ஆதரவாளா்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து திமுக மாவட்டச் செயலா் மற்றும் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளைக் கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் அவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது ஏற்புடையது அல்ல.

காங்கிரஸ் நிா்வாகி காமராஜை கொலை செய்ய முயன்றவா்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.