/

அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம்: வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்: மாணிக்கம் தாகூா்

தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதா் அணிந்த இரு காங்கிரஸாா் தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்

News image

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:51 am IST

தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதா் அணிந்த இரு காங்கிரஸாா் தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என அக்கட்சியின் விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: 2026 தோ்தலுக்கு முன்பே திமுக, ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீா்ப்பை வழங்கிவிட்டாா்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனா். ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய தவெக தலைவரும், முதல்வருமான விஜய், தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளாா். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதா் அணிந்த இரு காங்கிரஸ் கட்சியினா் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறாா்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டா்களுக்கு இது உணா்ச்சிபூா்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என பதிவிட்டுள்ளாா் மாணிக்கம் தாகூா்.