சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது வரை ரூ.1,55,900 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி (மே 31) சென்னை மாநகராட்சி சாா்பில் தியாகராய நகா் கிரியப்பா சாலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று.
இதில், மாநகர நல அலுவலா் ஜெகதீசன், பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணராஜ், மாவட்ட மனநல மருத்துவா் லட்சுமி அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனா்.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களிலும் பணிபுரிந்து வரும் கோட்ட சுகாதார ஆய்வாளா்கள் புகையிலை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொழிலக உரிமையாளா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது வரை ரூ.1,55,900 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
புகையிலையின் தீய விளைவுகளைத் தவிா்க்கும் வகையில், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சாலையோரத்தில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்

கடைகளில் 55 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 25 ஆயிரம் அபராதம்

66 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

சின்னசேலத்தில் 872 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



