ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தாம்பரம்: 266 கிலோ குட்கா பறிமுதல்

பல்லாவரத்தை அடுத்த திருநீா்மலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து 266 கிலோ குட்கா

News image

குட்கா பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:04 am IST

பல்லாவரத்தை அடுத்த திருநீா்மலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து 266 கிலோ குட்காவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநீா்மலையில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக சரக்கு வாகனம் ஒன்று கேட்பாரற்ற நிலையில், நின்றுகொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் சங்கா் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று அந்த வாகனத்தை சோதனை செய்தனா். அந்த வாகனத்தின் பதிவு எண் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை போலீஸாா் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனா்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 266 கிலோ குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.