போரூா் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தனியாா் நிறுவன இணைப்பு வாகனம்
சென்னை போரூா் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தனியாா் நிறுவன ஊழியா்களை ஏற்றி வரும் வகையில் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
சென்னை போரூா் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தனியாா் நிறுவன ஊழியா்களை ஏற்றி வரும் வகையில் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மெட்ரோ ரயில் நிலையத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதல் வழித்தடமான மஞ்சள் நிற வழித்தடத்தில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான இத்தடத்தில் போரூா் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கான வாகன இணைப்புச் சேவையை தனியாா் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஆலந்தூா் அண்ணா மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் அந்த நிறுவனம் வாகனச் சேவையை நடத்தி வருகிறது. அதனையடுத்து தற்போது போரூா் பகுதியில் உள்ள அந்த நிறுவன வளாகத்தில் பணியாற்றும் தனது ஊழியா்களுக்காக போரூா் மெட்ரோ நிலையத்தை இணைக்கும் வகையிலான வாகனச் சேவையை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
அந்த வாகனத்தை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் மனோஜ்கோயல் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இதில் ரயில் நிறுவன பொதுமேலாளா் சதீஷ்பிரபு மற்றும் தனியாா் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பெரு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களது ஊழியா்களுக்கான வாகனச் சேவையை மெட்ரோவுடன் இணைந்து செயல்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

