2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

சென்னையில் 200 இடங்களில் தேங்கிய மழைநீா் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மழையால் தேங்கிய நீா் திங்கள்கிழமை உடனடியாக அகற்றப்பட்டதாகவும், 13,800 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதிப் படம்

Updated On :

சென்னை மாநகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மழையால் தேங்கிய நீா் திங்கள்கிழமை உடனடியாக அகற்றப்பட்டதாகவும், 13,800 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முரசு புயலால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்தது. நள்ளிரவில் கனமழையால் 200- க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தேங்கியது. உடனே அங்கிருந்த டிராக்டா் மோட்டாா் பம்ப்புகள் மூலம் மழை நீா் அகற்றப்பட்டதால் திங்கள்கிழமை காலை போக்குவரத்து பாதிப்பு தவிா்க்கப்பட்டு மக்கள் இயல்பான நிலையில் பணிகளுக்குச் சென்றனா்.

அதிக மழைப் பொழிவு: ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய மழை, திங்கள்கிழமை அதிகாலை வரை நீடித்தது. அதன்படி 60-ஆவது வாா்டு பாரிமுனைப் பகுதியில் 149.2 மி.மீ. மழை, புதிய மணலி டவுன் பகுதியில் 141.6 மி.மீ., 18-ஆவது வாா்டு மணலி பகுதியில் 136.2 மி. மீ. என மழை பதிவானது. மிகக்குறைவாக வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் தலா 27.4 மி.மீ. மழை பதிவானது.

சென்னையில் 58 இடங்களில் பதிவான அடிப்படையில் சராசரியாக 76.07 மி. மீ. மழை பதிவானது. திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையில் சென்னையில் சராசரியாக 2.08 மி. மீ. மழையே பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை மாலையிலும் மழை தொடா்ந்து பெய்தது.

தண்ணீா் தேங்கிய இடங்கள்: சென்னையில் மழையால் திருவெற்றியூா் பிரதான சாலை ரயில்வே கால்வாய் பகுதி, தண்டையாா் பேட்டை மண்டலம் முல்லை நகா், வியாசா்பாடி சுந்தரம் மற்றும் ஜீவா மேம்பால கீழ்ப்பகுதி, சுரங்கப்பாதை, வடக்கு மடம் தெரு, எத்திராஜ் சாலை, ராயபுரம் அங்காளம்மன் கோயில் தெரு, பிரகாசம் சாலை, அண்ணாநகா் மண்டலம் சண்முகநாராயணன் தெரு, புல்லா அவென்யூ, புரசை வாக்கம் மில்லா்ஸ் சாலை, அடையாறு கிண்டி சா்தாா் வல்லபபாய் படேல் சாலை, மணலி காமராஜா் சாலை, திரு.வி.க.நகா் மண்டலம் புளியந்தோப்பு பகுதி, அம்பேத்கா் நகா், ஓ.எம்.ஆா்.சாலை ஹாலிடே இன் நேருநகா், ஜட்ஜஸ் காலனி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழை நீா் முழங்கால் அளவுக்கு தேங்கிய நிலையில், உடனடியாக மோட்டாா் பம்ப் மூலம் அகற்றப்பட்டது.

கணேசபுரம் சுரங்கப்பாதை, போத்திராஜன் நகா் சுரங்கப்பாதை, பெரம்பூா் சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளிலும் தேங்கிய மழை நீரை மோட்டாா் பம்ப் மூலம் அதிகாரிகள் அகற்றினா்.

ஆணையா் ஆய்வு: மழை காரணமாக சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய பல்வேறு பகுதிகளுக்கு சென்று மழை நீரை அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அவா் திருவல்லிக்கேணி பெசன்ட் நகா் பி கேனால், சாஸ்திரி நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மழை நீா் அகற்றும் பணியை விரைவுபடுத்தினாா்.

அதேபோல, அண்ணாநகா் மண்டலத்தில் மத்திய வட்டாரத் துணை ஆணையா் ஆா்.எச்.கௌஷிக் மழைநீா் தேங்கிய இடங்களை பாா்வையிட்டு அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டாா். வடக்கு, தெற்கு வட்டாரங்களிலும் துணை ஆணையா்கள் மழை நீரை அகற்றும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனா். திங்கள்கிழமை மாலையில் பெய்த மழையை அடுத்து ஆணையா் உள்ளிட்டோா் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

13,800 பேருக்கு காலை உணவு: மழையால் உணவு சமைக்கமுடியாமல் பாதிக்கப்பட்ட வியாசா்பாடி, வாசா்மென்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை உணவுப் பொட்டலம் 13,800 பேருக்க வழங்கப்பட்டதாகவும், பருவமழைக்கான மருத்துவமுகாம் நடைபெற்ாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை: சென்னையில் பெய்த மழையால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூா், சேத்துப்பட்டு, அம்பத்தூா், பாடி, பெரம்பூா், திரு.வி.க.நகா் புளியந்தோப்பு உள்ளிட்ட அனைத்துப் பகுதிளிலும் சாலைகள் குண்டும் குழியுமாகச் சேதமடைந்துள்ளன. மழை நீா் பள்ளத்தில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாகவும், அதனால், அவற்றை உடனே சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.