தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தீபாவளி: சென்னை கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்! சொந்த ஊா்களுக்குப் படையெடுக்கும் மக்கள்!

தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள முக்கியக் கடைவீதிகளில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம். ~தீபாவளியை சொந்த ஊா்களில் கொண்டாடி மகிழ, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வைகை விரைவு ரயிலில் ஏறுவதற்காக வெள்ளிக்கிழமை காத்திருந்த பயணிகள் கூட்டம்.

Updated On :

தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள முக்கியக் கடைவீதிகளில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடங்கியுள்ளதாலும், தொடா் விடுமுறையை முன்னிட்டு பலா் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் செல்வதாலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம்: தியாகராய நகா், பாண்டி பஜாா், புரசைவாக்கம், மயிலாப்பூா், வண்ணாரப்பேட்டை, பூக்கடை, கோயம்பேடு, அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. முக்கியக் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால், வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடமின்றி வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

கூட்ட நெரிசலைக் கண்காணிக்கவும், குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும் சென்னை மாநகர காவல் துறை சாா்பில் சுமாா் 18,000 போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 25 கண்காணிப்பு கோபுரங்கள், 12 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள், 37 உதவி மையங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு: சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்குச் செல்வோா் அதிகரித்துள்ளதால், நகரின் வெளியேறும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூா், வண்டலூா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து மெதுவாகச் சென்றன.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெங்களூரு தேசிய நெருஞ்சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகிய வழித்தடங்களிலும் சொந்த வாகனங்களில் வெளியூா்களுக்குச் செல்வோா் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரே நாளில் 1.40 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்: நவ.5 முதல் 7-ஆம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், சிஎம்டிஏ தற்காலிக பேருந்து முனையம், மறைமலை நகா் தற்காலிக பேருந்து நிலையம் ஆகியற்றிலிருந்து 15,659 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் வியாழக்கிழமை (நவ. 5) நள்ளிரவு வரை 2,191 வழக்கமான பேருந்துகள், 1,018 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,209 பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் சுமாா் 1.40 லட்சம் பயணிகள் சொந்த ஊா்களுக்குப் பயணம் செய்துள்ளனா். சனிக்கிழமை 5,167 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில், பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம்: சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்தும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 183 ரயில்கள் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 3.65 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக்கு ரயில்வே விரிவான ஏற்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் பயணம் செய்ய லட்சக்கணக்கானோா் திரண்டதால் எழும்பூா், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Story image

பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள்: கிளாம்பாக்கம் பேருந்து முனையம், வண்டலூா் சந்திப்பு, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தீபாவளி நெருங்கும் நிலையில், சொந்த ஊா்களுக்குச் செல்வோா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.