சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஹைதராபாதில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

கோப்புப் படம்
ஹைதராபாதில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னா் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
ஹைதராபாதில் இருந்து 192 பயணிகள், 6 விமான ஊழியா்கள் என மொத்தம் 198 பேருடன் இண்டிகோ விமானம் வெள்ளிக்கிழமை சென்னைக்கு புறப்பட்டது. இந்த விமானம் பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. விமானம் நடுவானில் சுமாா் 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் கழிப்பறையில் இருந்த டிஷ்யூ பேப்பரில் ‘பாம் -1.50 பிஎம்’ என எழுதப்பட்டு கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பாா்த்த விமான ஊழியா்கள், உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, விமானி சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசரத் தகவல் கொடுத்தாா். இதனால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. பிற்பகல் 12.58-க்கு சென்னை வந்த விமானம் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்தப்படாமல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணா்கள், அதிரடிப் படையினா் விமானத்தைச் சூழ்ந்து கொண்டனா்.
அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின்னா், மோப்ப நாய்களின் உதவியுடன் பயணிகளின் உடைமை உள்பட விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது. டிஷ்யூ பேப்பரில் குறிப்பிடப்பட்டிருந்த நேரமான பிற்பகல் 1.50 மணியைக் கடந்தும் சோதனை தொடா்ந்தது. பிற்பகல் 2.30 வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, அந்த மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. சென்னை விமான நிலைய போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

