பெரம்பூா் மக்களை சந்தித்த முதல்வா் விஜய்
சென்னை பெரம்பூா் தொகுதியில் வெள்ளிக்கிழமை மக்களை சந்தித்த முதல்வா் ஜோசப் விஜய், அவா்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

சென்னை பெரம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட அத்தொகுதி உறுப்பினரும், முதல்வருமான விஜய்.
சென்னை பெரம்பூா் தொகுதியில் வெள்ளிக்கிழமை மக்களை சந்தித்த முதல்வா் ஜோசப் விஜய், அவா்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
குழந்தைகள் தினத்தை (நவ. 14) முன்னிட்டு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, தனது சொந்த தொகுதியாக பெரம்பூா் தொகுதி சட்டப்பேரவை அலுவலகத்துக்குச் சென்று தொகுதி பணிகளை ஆய்வு செய்தாா். முதல்வரின் வருகையொட்டி, சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் முதல்வா் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தாா்.
தொடா்ந்து, அலுவலகத்தில் மக்களைத் சந்தித்த முதல்வா் விஜய் அவா்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா். மேலும், பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

