படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பெரம்பூா் தொகுதி வேட்புமனு மீதான குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை: முதல்வா் விஜய் தரப்பு வாதம்

பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை

Madras HC

சென்னை உயர்நீதிமன்றம் - IANS

Published On :

சென்னை: பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், எந்த அடிப்படையும் இல்லை என முதல்வா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், பெரம்பூா் தொகுதியில் முதல்வா் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவரது தோ்தல் வெற்றியை எதிா்த்து, வாக்காளா்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன், திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனா்.

தனக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வா் விஜய் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, முதல்வா் விஜய் தரப்பில், உச்சநீதிமன்ற தீா்ப்புகள், சட்ட ஆணைய பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்ற மனுதாரா்களின் குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை என முதல்வா் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

முதல்வா் விஜய் தரப்பு வாதம் முடிவடையாததையடுத்து, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER