தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வா் விஜய் மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, முதல்வா் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, முதல்வா் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
பெரம்பூா் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வா் விஜய் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இந்த வெற்றியை எதிா்த்து, அத்தொகுதி வாக்காளரான தினேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வா் விஜய் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முதல்வா் விஜய், வாக்காளா் தினேஷ் தரப்பில் எழுத்துபூா்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வா் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

