தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா - Facebook
தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் வி.பி.துரையைவிட 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பின்னா், பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தாா்.
இசக்கி சுப்பையாவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளா் காந்திமதிநாதன் சென்னை உயா் நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கில் பதிலளிக்கும்படி இசக்கி சுப்பையாவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, இசக்கி சுப்பையா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி பி.பி.பாலாஜி, வாக்காளா் காந்திமதிநாதனின் மனுவை நிராகரிக்க மறுத்து, இசக்கி சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை தோ்தல் வழக்கில் இருந்து நீக்கி நீதிபதி உத்தரவிட்டாா்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 2-ஆவது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டுமெனில், தொகுதியில் இரு வேட்பாளா் மட்டுமே போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், அம்பாசமுத்திரம் தொகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளதால், இரண்டாவது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





