தேர்தல் வழக்கு: அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா மனு தள்ளுபடி
அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றிபெற்ற இசக்கி சுப்பையாவின் மனு தள்ளுபடி குறித்து...
அம்பாசமுத்திரம் தொகுதியில் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரிய இசக்கி சுப்பையாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இருப்பினும், தேர்தலில் அதிமுக வெற்றி பெறாத நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த இசக்கி சுப்பையா, ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தார்.
இதனிடையே, அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையாவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி வாக்காளர் காந்திமதிநாதன் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி இசக்கி சுப்பையா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இருப்பினும், இசக்கி சுப்பையாவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இசக்கி சுப்பையாவின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணை தொடரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Summary
Ambasamudram Isakki Subbiah's petition in the election case dismissed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







