சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!ஆண்டுதோறும் சினிமா, சின்ன திரை விருதுகள்: ராஜ்மோகன் உறுதி கத்திக்குத்துக்குப் பிறகும் மக்கள் உயிரைக் காத்த இந்திய விமானி! மோடி புகழாரம்ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு இன்று முதல் தடை

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுவது குறித்து...

கனிமவள லாரிகளுக்கு இன்று முதல் தடை... - பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. அதுமட்டுமின்றி, அனுமதி இல்லாத லாரிகளால் மாநிலத்துக்குள்ளேயும் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாகவும் புகார்கள் தெரிவித்தன.

இதனையடுத்து, தமிழகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் செப். 30-க்குள் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இல்லையெனில், ஜிபிஎஸ் பொருத்தப்படாத லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், தமிழகத்தில் கனிம வளம் ஏற்றுவதற்கு 1.4 லட்சம் லாரிகள் பதிவு செய்திருக்கும்நிலையில், இதுவரையில் 24,000 லாரிகளில் மட்டுமே ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் இன்று முதல் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகள் மட்டுமே கனிம வளங்களை ஏற்றிச் செல்ல முடியும். ஜிபிஎஸ் பொருத்தாத வாகனங்களில் உடனடியாக பொருத்தப்பட வேண்டும். இல்லையெனில், அவர்களால் கருங்கற்கள், எம் சாண்ட், மணல் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது. மேலும், அவர்களுடைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்படும்.

இதனையும் மீறி, ஜிபிஎஸ் பொருத்தப்படாத வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றப்படுவதாகப் புகார்கள் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

Summary

Ban on mineral-transporting lorries without GPS devices effective from today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.