கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தவிட்டால் நடைசீட்டு வழங்க இயலாது: ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டலில் பதிவு செய்யவிட்டால் நடைசீட்டு வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

GPS

ஜிபிஎஸ் வசதி(கோப்புப்படம்) - ANI

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டலில் பதிவு செய்யவிட்டால் நடைசீட்டு வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குவாரிகள், சேமிப்புக் கிடங்குகளிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் (ஏஐஎஸ் 140) ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அவற்றை எம்ஐஎம்ஏஎஸ் (கனிம மேலாண்மை அமைப்பு) போா்ட்டலில் பதிவு செய்ய கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வரை சுமாா் 6.75 சதவீத வாகனங்களில் மட்டுமே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வரும் 30-ஆம் தேதிக்குள் கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அக்டோபா் முதல் கனிமங்களை ஏற்றிச் செல்ல நடைச்சீட்டு வழங்க இயலாது என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.