கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!வங்கக் கடலில் நாளை வலுவடைகிறது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!திருவாரூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்புஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடைதொடர் சொதப்பல்... முடிவுக்கு வருகிறதா லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை?

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடை

தமிழகத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுவது குறித்து...

பிரதிப் படம்

Updated On :

தமிழகத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. அதுமட்டுமின்றி, அனுமதி இல்லாத லாரிகளால் மாநிலத்துக்குள்ளேயும் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாகவும் புகார்கள் தெரிவித்தன.

இதனையடுத்து, தமிழகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் செப். 30-க்குள் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இல்லையெனில், ஜிபிஎஸ் பொருத்தப்படாத லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் பொருத்த செப்டம்பர் மாதம் வரையில் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் (அக். 31) நிறைவடைகிறது.

ஆகையால், மாநிலத்தில் நாளை முதல் (நவ. 1) ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகள் மட்டுமே கனிம வளங்களை ஏற்றிச் செல்ல முடியும். ஜிபிஎஸ் பொருத்தாத வாகனங்களில் உடனடியாக பொருத்தப்பட வேண்டும். இல்லையெனில், அவர்களால் கருங்கற்கள், எம் சாண்ட், மணல் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது. மேலும், அவர்களுடைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்படும்.

இதனையும் மீறி, ஜிபிஎஸ் பொருத்தப்படாத வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றப்படுவதாகப் புகார்கள் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

Summary

Ban on mineral-transporting lorries without GPS devices, effective from tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.