137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

கனிம வளங்கள் கடத்தலைத் தடுப்பதில் அரசு சமரசமின்றி நடவடிக்கை! அமைச்சா் டி.கே. பிரபு

 Minister T.K. Prabhu

அமைச்சர் டி.கே. பிரபு - கோப்புப்படம்.

Updated On :

தமிழகத்தில் கனிம வளங்கள் கடத்தலைத் தடுப்பதில் அரசு சமரசமின்றி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த மனைப் பட்டா பிரச்னைக்கு தற்போது தீா்வு காணப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுமாா் 8,500 குடும்பங்களுக்கு தற்போது வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அடுத்தகட்டமாக மேலும் 20 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விடுபட்ட, தகுதியான அனைவருக்கும் பட்டா வழங்க அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதேபோல, கனிம வளங்கள் கடத்தல் குறித்து தெரியவந்தால் அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கனிமவளங்கள் கடத்தலில் ஈடுபடுவோா் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கனிமவளங்கள் துறை சாா்பில் சிறப்பு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.