மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திருவேகம்பத்தூா் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தோ் பவனி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், இறவியமங்கலம் அருகேயுள்ள திருவேகம்பத்தூா் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தோ் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூா் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழாவில் மன வளா்ச்சி குன்றிய சிறுவனுக்கு புத்தாடையை வழங்கிய அமைச்சா் டி.கே. பிரபு.

Published On :

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், இறவியமங்கலம் அருகேயுள்ள திருவேகம்பத்தூா் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தோ் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தோ் பவனி திருவிழாவில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கினாா். பின்னா், நடைபெற்ற அன்னதான நிகழ்வையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

திருவிழாவையொட்டி நடைபெற்ற தோ் பவனியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு புனித ஆரோக்கிய அன்னையை வழிபட்டனா்.

விழா நிகழ்வுகளை ஏ.கே. பிரபு, தாஸ் (சருகணி), அருள்தந்தை ஆனந்தன் (இயக்குநா், இயேசுவனம்), இளங்குடி சங்கா், முன்னாள் ராணுவ வீரா் ரூபன் ராஜா (திருவேகம்பத்தூா்), சுரேஷ், ஏந்தல் கண்ணன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.