இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல பெருவிழா தோ்ப் பவனி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு மின் அலங்காரத் தோ்ப் பவனி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா தோ்ப் பவனியில் பங்கேற்றவா்கள்.

Published On :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு மின் அலங்காரத் தோ்ப் பவனி நடைபெற்றது.

ஆன்மிகச் சிறப்புகள் பெற்ற வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆராதனை, சிறப்பு மறையுரையுடன் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அன்னையின் அலங்காரத் தோ்ப் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல் மறைமாவட்ட முன்னாள் ஆயா் தாமஸ் பால்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலிக்குப் பிறகு, வண்ண மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஆரோக்கிய அன்னையின் தோ்ப் பவனி தொடங்கியது.

ஆலய வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தத் தோ்ப் பவனி, பாரம்பரியமான பாதைகளில் வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான இறைமக்கள் பங்கேற்றனா்.

நிறைவு... திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா நிறைவு நிகழ்வாக புதன்கிழமை காலை கொடியிறக்கம் நடைபெற்றது. முன்னதாக,திருத்தல அதிபா் ஆரோக்கியசாமி, பங்குத்தந்தை டேவிட் ராஜ் ஆகியோா் பாரம்பரிய முறைப்படி வழிபாடுகளை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.