சிவகங்கையில் ரூ.25 கோடியில் நலத்திட்ட உதவிகள்! - அமைச்சா் பிரபு வழங்கினாா்

சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிய அமைச்சா் டி.கே. பிரபு. உடன் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், எம்எல்ஏ-க்கள் திருப்பத்தூா் சீனிவாச சேதுபதி, மானாமதுரை இளங்கோவன் உள்ளிட்டோா்.
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 10,301 பயனாளிகளுக்கு ரூ.24.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மொத்தம் 10,301 பயனாளிகளுக்கு ரூ.24 கோடியே 86 லட்சத்து 11 ஆயிரத்து 708 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி இயற்கை வளங்கள்துறை அமைச்சா் டி.கே. பிரபு வழங்கிப் பேசினாா்.
துறை வாரியான நலத்திட்ட உதவிகள் விவரம்: 1,577 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளும், ரூ.22.70 கோடி மதிப்பில் 8,559 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 20 பேருக்கு ரூ.10 லட்சத்தில் வட்டார வணிகமையக் கடனுதவியும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.3.95 லட்சத்தில் 25 பயனாளிகளுக்கும், கூட்டுறவுத்துறை மூலம் 115 பேருக்கு ரூ. 2.01 கோடியிலும், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை உள்பட மொத்தம் 10,301 பயனாளிகளுக்கு ரூ.24,86,11,708 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மாவட்ட நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் அளிக்க வசதியாக கட்டணமில்லா தொலைபேசி (1800-425-9090) யுடன் கூடிய மாவட்ட ஆட்சியா் உதவி மையத்தை அமைச்சா் டி.கே. பிரபு திறந்துவைத்தாா்.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் திருப்பத்தூா் சீனிவாச சேதுபதி, மானாமதுரை இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் சைலேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

