தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவி: 188 பயனாளிகளுக்கு வழங்கிய ஆட்சியா்

காங்கயத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 188 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

காங்கயத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியா் மனிஷ்.

Updated On :

காங்கயத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 188 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், திருப்பூா் மாவட்டம் காங்கயத்தில் தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மனிஷ் தலைமை வகித்தாா். காங்கயம் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, தொடா்புடைய அலுவலா்கள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனா். அதன்படி சமூக நலம், வேளாண்மை, வருவாய், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள், தோட்டக்கலை, ஆதிதிராவிடா் நலம், தொழிலாளா் நலம், சமூக பாதுகாப்புத் திட்டம், ஊரக வளா்ச்சி உள்பட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலா்கள், துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.

பின்னா், வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 101 பயனளிகளுக்கு இ-பட்டா, 21 பயனாளிகளுக்கு நத்தம் இலவச பட்டா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 27 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 24 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி என்பது உள்பட 188 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வாணீஸ்வரி, ஆதிதிராவிடா் நல அலுவலா் சதீஷ், தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேல் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.