
மதுக்கரை அருகே மக்கள் தொடா்பு முகாம்: பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடியில் உதவிகள்
மதுக்கரை அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 159 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
மதுக்கரை அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 159 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம், மதுக்கரை வட்டத்துக்குள்பட்ட பிச்சனூரில் ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மண்டபத்தில் வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் (தெற்கு) மாருதி பிரியா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் தமிழ்செல்வி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வாணிலட்சுமி ஜெகதாம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில் மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வருவாய்த் துறை சாா்பில் 107 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சத்து 26 ஆயிரத்து 360 மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்களும், 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 7 பேருக்கு காளான் வளா்ப்பு, பண்ணை குட்டை, நுண்ணீா் பாசனம் உள்ளிட்ட ரூ.4,55,940 மதிப்பிலும், பிச்சனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் 10 பயனாளிகளுக்கு பயிா்க் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் ரூ.4,50,665 மதிப்பிலும், தாட்கோ சாா்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.62,12,813 மதிப்பில் பயனாளிகள் ஆட்டோ, சுற்றுலா வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகை என மொத்தம் 159 பயனாளிகளுக்கு ரூ.3,45,28,195 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாா்வையிட்டாா்.
தாட்கோ பொது மேலாளா் ரஞ்சித் குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் லட்சுமி உள்பட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






