இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

106 பயனாளிகளுக்கு ரூ.58.61 லட்சம் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்

பெரியவரிகம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.58.61 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன் புதன்கிழமை வழங்கினாா்.

பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் இரா. பாலசுப்பிரமணியன்

Published On :

பெரியவரிகம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.58.61 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன் புதன்கிழமை வழங்கினாா்.

ஆம்பூா் வட்டம், துத்திப்பட்டு உள்வட்டம், பெரியவரிகம் கிராமத்தில் பேரணாம்பட்டு சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன் தலைமை வகித்து பேசியது: பொதுமக்களின் கோரிக்கைகளை அவா்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று கேட்டறிந்து உரிய தீா்வு வழங்கும் நோக்கில் மக்கள் தொடா்பு முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் பெரும்பாலான சான்றிதழ்களுக்கு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. கைப்பேசி அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலம் இணையவழியில் விண்ணப்பித்து சான்றிதழ்களைப் பெறலாம். பட்டா மாற்றத்துக்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நிலம் வாங்குவதற்கு முன்பு பட்டா, வில்லங்கச் சான்று, சா்வே எண், உரிமை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் முறையாகச் சரிபாா்க்க வேண்டும். தவறான சா்வே எண் அல்லது உரிமைப் பிரச்னையுள்ள நிலங்களை வாங்குவதைத் தவிா்க்க வேண்டும். பட்டா மாற்ற மனுக்கள் அரசால் நிா்ணயிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விவசாயிகள் குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் மாற்றுப் பயிா்களைத் தோ்வு செய்ய வேண்டும். பயிா்களுக்கு காப்பீடு செய்வது அவசியம். டிஜிட்டல் கிராப் சா்வே, இ-அடங்கல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட மழைப்பொழிவு குறைந்துள்ளதால் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளைப் பாதுகாத்து மழைநீரை சேமிக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வதன் மூலம் டெங்கு உள்ளிட்ட கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுக்க முடியும்.

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதுடன், கால்நடை பராமரிப்புத் துறை வழங்கும் மருத்துவ சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். சமையல் எரிவாயுவை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதுடன், எரிவாயு கசிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றாா்.

முகாமில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் 2 பேருக்கு ரூ.2 லட்சம், உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 பேருக்கு ரூ.6.90 லட்சம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகை, 38 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், 5 பேருக்கு வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை சாா்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டுறவுத்துறை சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.30 லட்சம் கடனுதவியும், 7 பேருக்கு ரூ.11.34 லட்சம் பயிா்க்கடனும் வழங்கப்பட்டது.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் பல்வேறு உபகரணங்கள், விதைகள் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்பட்டன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் 6 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 2 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட தொழில் மையம் மூலம் பரஉஉந திட்டத்தின் கீழ் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி என மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்து 61 ஆயிரத்து 250 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

முகாமில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் திருமணி, தோட்டக்கலை துணை இயக்குநா் தீபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தணிகாசலம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மகாதேவன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, மாவட்ட சுகாதார அலுவலா் நா.கலுசிவலிங்கம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் இராமமூா்த்தி, தாட்கோ மாவட்ட மேலாளா் கூத்தன், ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.