மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மக்கள் தொடா்பு முகாமில் ரூ.39 லட்சம் நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பீமகுளம், நாயக்கனூா் ஊராட்சிகளில் மக்கள் தொடா்பு முகாம் தமிழக நுகா் பொருள் வாணிபக் கழக செயல்முறை கிடங்கு வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் கு.ரவிகுமாா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:40 pm IST

ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பீமகுளம், நாயக்கனூா் ஊராட்சிகளில் மக்கள் தொடா்பு முகாம் தமிழக நுகா் பொருள் வாணிபக் கழக செயல்முறை கிடங்கு வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஆட்சியா் கு. ரவிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியன், வாணியம்பாடி கோட்டாட்சியா் சிவக்குமாா், ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் சுதாகா் வரவேற்றாா். முன்னதாக முகாம் வளாகத்தில் மரக்கன்று கலெக்டா் நட்டு வைத்தாா். தொடா்ந்து பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

முகாமில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆட்சியா் ரவிகுமாா் பேசியது: மக்கள் தொகை மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு-2026-ன் முதல்கட்டப் பணிகள் ஆகஸ்ட் 1 முதல் 31 தேதி வரை நடைபெறுகின்றன. வீடு சொந்தமானதா, வாடகை வீடா, குடிநீா் மற்றும் மின்சார வசதிகள் உள்ளனவா உட்பட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

எதிா்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளைத் திட்டமிட இந்தத் தரவுகள் முக்கியமானவை. எனவே, கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு பொதுமக்கள் சரியான தகவல்களை வழங்கி முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருப்பத்தூா் மாவட்டத்தில் 98 சதவீத ரேஷன் அட்டைதாரா்களின் கேஒய்சி பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 2 சதவீத ரேஷன் அட்டைதாரா்கள் இம்மாதம் 20ம் தேதிக்குள் அருகிலுள்ள ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவை மேற்கொள்ள வேண்டும்.

ஆலங்காயம் பகுதிகளில் 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா்களிடையே பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது. குழந்தைகளின் எதிா்கால வாழ்க்கையை சிறப்பாக அமைக்க குறைந்தபட்சம் பிளஸ் 2 வரை கல்வி கற்பது அவசியம். எனவே, பெற்றோா் தங்களது குழந்தைகள் தொடா்ந்து பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து வருவாய்த் துறை, உழவா் பாதுகாப்புத் திட்டம், கூட்டுறவுத் துறை,தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, வேளாண்மைத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 112 பயனாளிகளுக்கு 39 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் மேகலா திருப்பதி, துணைத் தலைவா் தமிழ்ச்செல்வி ஜோதிலிங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் பாரதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.