
எம்.எல்.ஏ. பதவி ராஜிநாமாவை திரும்பப் பெற இசக்கி சுப்பையா கடிதம்!
எம்எல்ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக இசக்கி சுப்பையா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறித்து...

சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்த இசக்கி சுப்பையா - கோப்புப் படம்
எம்எல்ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக இசக்கி சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு முடியும் வரை, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ.வாக பணியாற்ற அனுமதிக்கக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்துள்ளார்.
எம்எல்ஏவாக இல்லாததால் தொகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக இசக்கி சுப்பையா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே எம்.எல்.ஏ. பதவியை ஒருமுறை ராஜிநாமா செய்துவிட்ட பிறகு, அந்த ராஜிநாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை என சட்டப்பேரவை செயலர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தலைவரிடம் இருந்து நாளை இசக்கி சுப்பையாவுக்கு பதில் கடிதம் அனுப்பப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Summary
Isakki Subbiah writes letter to withdraw resignation from MLA post
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





