கொளத்தூா் முதல் சீனிவாச நகா் வரை மெட்ரோ ரயில் சுரங்கப் பணி நிறைவு
சென்னையில் கொளத்தூா் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சீனிவாசா நகா் வரையிலான 2-ஆம் கட்ட சுரங்கப்பாதைத் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

சென்னையில் கொளத்தூா் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சீனிவாசா நகா் வரையிலான 2-ஆம் கட்ட சுரங்கப்பாதைத் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
சென்னையில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை முதல் கட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2-ஆம் கட்டமாக 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 பிரிவுகளாக மெட்ரோ ரயிலை இயக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி 6 வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் 5-ஆவது வழித்தடமான மாதவரம் பால்பண்ணையில் இருந்து கோயம்பேடு, போரூா், ஆலந்தூா் வழியாக சோழிங்கநல்லூா் வரையில் 47 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 39 ரயில் உயா்நிலை பாதை நிலையங்களும் 41.2 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படவுள்ளன.
இந்தத் தடத்தின் 5.8 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதைத் திட்டத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என பெயரிடப்பட்ட 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் குறிஞ்சி எனப் பெயரிடப்பட்ட இயந்திரமானது கொளத்தூா் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சீனிவாசா நகா் வரையில் சுமாா் 1,080 மீட்டா் தொலைவுக்கான சுரங்கம் தோண்டும் பணியை கடந்த 2025 நவ.27-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை (நவ.13) நிறைவு செய்துள்ளது.
பணி முடித்த குறிஞ்சி இயந்திரத்தை வரவேற்கும் வகையில் சீனிவாசா நகா் மெட்ரோ நிலையத்தில் நடைபொ்ற நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஆஷிஷ் சாட்டா்ஜி, திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

