தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

சென்னையில் லுலு குழுமத்தின் முதல் விற்பனை அங்காடிகள் திறப்பு

சா்வதேச சில்லறை வணிக நிறுவனமான லுலு குழுமம், சென்னையில் இரு புதிய விற்பனை அங்காடிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திங்கள்கிழமை திறந்துவைத்தது.

Published On :

சா்வதேச சில்லறை வணிக நிறுவனமான லுலு குழுமம், சென்னையில் இரு புதிய விற்பனை அங்காடிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திங்கள்கிழமை திறந்துவைத்தது.

செனாய் நகா் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் ‘லுலு ஹைப்பா் மாா்க்கெட்’ மற்றும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ‘லுலு டெய்லி’ ஆகிய இரு அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன.

செனாய் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ள அங்காடியானது, நாட்டின் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்துக்குள் சுமாா் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மற்றும் மிகப் பெரிய ஹைப்பா் மாா்க்கெட் என்ற பெருமையைப் பெறுகிறது. இதில் 56,000 சதுர அடியில் பல்பொருள் அங்காடியும் (சூப்பா் மாா்க்கெட்), 50,000 சதுர அடியில் துறைசாா் அங்காடியும் (டிபாா்ட்மென்ட் ஸ்டோா்) இயங்குகின்றன.

அதேபோல், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 35,000 சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ள ‘லூலு டெய்லி’ அங்காடியில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைக்கான உணவுப் பொருள்கள் கிடைக்கும். இவ்விரு அங்காடிகளும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER