இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் உத்தரவை எதிா்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 விலை உயா்வு விதிக்கப்பட்டதை எதிா்த்து, மதுபானக் கூடங்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சாா்பில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On :

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 விலை உயா்வு விதிக்கப்பட்டதை எதிா்த்து, மதுபானக் கூடங்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சாா்பில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மது பாட்டில்களை பொதுவெளிகளில் வீசிச் செல்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில், உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் மதுபான விற்பனையின்போது, பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாயை திருப்பி வழங்கப்படும். இதுதொடா்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆணையா் சுற்றறிக்கை பிறப்பித்தாா்.

அந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல செஸ் வரியாக, நவ. 1 முதல் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.

இதை எதிா்த்து, டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்யும், எஃப்எல்-2, எஃப்எல்-3 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கூடங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை நிறுத்தி விட்டு, மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை ரூ.10 அதிகரித்து, கடந்த அக். 29 -ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல காலி பாட்டில்களைத் திரும்பப் பெறவும், 10 ரூபாயை திரும்ப வழங்கவும் ரிவா்ஸ் வென்டிங் இயந்திரங்களை நிறுவவும் அரசு முடிவு செய்துள்ளது.

மதுபானக் கூடங்களில் வாங்கும் மதுபான பாட்டில்களை உறுப்பினா்கள், வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவது இயலாது. இதனால், பாட்டில்களை டாஸ்மாக் நிறுவனத்திடம் வழங்க முடியவில்லை. இந்த சிரமங்களை கருத்தில் கொள்ளாமல் மதுவிலக்கு துறை ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

சுற்றுச்சூழல் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் தங்கள் மதுபான விடுதிகள், நட்சத்திர விடுதிகளின் வா்த்தகம் பாதிக்கப்படும். மதுபான விடுதிகளுக்கு செஸ் வரி விதிக்க முடியாது என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்